ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல்… அண்ணாமலை கண்டனம்: அறநிலையத்துறை விளக்கம்!

Published On:

| By christopher

Attack on Ayyappa Devotees

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வெளிமாநில பக்தர்களை காவலர்கள் தாக்கியதாக கூறப்படும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

108 வைணவ திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமாக திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கருதப்படுகிறது. இங்கு தினமும் தமிழ்நாட்டைத் தாண்டி வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் இன்று (டிசம்பர் 12) காலை ரங்கநாதரை தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். அப்போது பக்தி பரவசத்தில் மூலஸ்தானத்தில் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை வழிபாடு செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அமைதியாக தரிசனம் செய்யும்படி கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

இதனை ஏற்க மறுத்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த கோவில் ஊழியர்கள்  ஐயப்ப பக்தர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் மூலஸ்தானத்தில் ரத்தம் சொட்ட சொட்ட ஐயப்ப பக்தர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபடும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து கோயில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைகளுக்கு பின் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்து சமய அறநிலைத்துறையை வெளியேற்ற வேண்டும்!

இதனையறிந்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில். “இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு, இந்துக் கோயில்களில் இருக்க வேண்டியதில்லை.

42 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலையில் இருந்து திரும்பியவுடன் ரங்கநாத சுவாமியை வழிபட விரும்பினர்.

ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததையும், சன்னதி அருகே தாக்கப்பட்ட சிலருக்கு சிறப்பு சிகிச்சை அளித்ததையும் கேள்வி எழுப்பினர் மற்றும் இதன் விளைவாக கோயில் வளாகத்திற்குள் ரத்தக்களரி ஏற்பட்டுள்ளது.

இதனால் தான் கோவில் நிர்வாகத்தில் இருந்து இந்து சமய அறநிலைத்துறையை வெளியேற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தொடர்ந்து கூறி வருகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலின் புனிதத்தை கெடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக திருச்சி மாவட்டப் பிரிவினர் இன்று கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்துவார்கள்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் தான் முதலில் தாக்குதலில் ஈடுபட்டனர்!

ஐயப்ப பக்தர்கள் மீதான தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், “இன்று காலை சுமார் ஏழு மணி அளவில் ஸ்ரீரங்கம் காயத்ரி மண்டபத்தில் பக்தர்கள் வரிசையில் ஆந்திராவைச் சேர்ந்த 34 நபர்கள் காயத்ரி மண்டபத்தில் உள்ள உண்டியலை மிகுந்த ஓசை உடன் அடித்துள்ளார்கள். அங்கிருந்த உண்டியலையும் பிடித்து ஆட்டி உள்ளார்கள்.

இதனை தட்டி கேட்ட திருக்கோயில் பணியாளரை தலை முடியை பிடித்து அதே உண்டியலில் மோதச் செய்துள்ளனர். எனவே ஒரு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தட்டிக் கேட்ட காவலரையும் போலீஸ் டவுன் டவுன் என்று கோஷம் எழுப்பி, மற்ற பக்தர்கள் யாரையும் தரிசனம் செய்யவிடாமல் இடையூறு செய்தனர்.

இதுகுறித்து உடனே காவல்துறையில் புகார் செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்ற விவரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று விளக்கம் அளித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஓடும் ரயிலில் பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது!

”நான் ஏன் தலைமறைவாகனும்?” : நேரில் ஆஜரான ஆர்.கே.சுரேஷ் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share