கேரளாவில் வெளியான ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற திரைப்படம் கடைசி வரிசை இருக்கையில் அமர்வதால் கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவது காட்சிப்படுத்தியது. கடைசி பெஞ்ச் இல்லாத வகையில் அரை வட்ட வடிவில் மாணவர்கள் இருக்கையை மாற்றி அமைக்கலாம் அந்த திரைப்படத்தில் வலியுறுத்தப்பட்டது. tngovt stop pa like seats in schools
இதைத்தொடர்ந்து கேரளாவில் சில பள்ளிகளில் மாணவர்கள் ‘ப’ வடிவ இருக்கை அமைப்பு கொண்டு வரப்பட்டது. இது குறித்த செய்திகள் நாளிதழ்களில் வெளியானது. இதைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பில் செயல்பட்டு வரும் சில பள்ளிகளில் இந்த ‘ப’ வடிவ இருக்கை அமைப்பு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்திலும் ‘ப’ வடிவ இருக்கை அமைப்பு கொண்டு வருவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு நேற்று வெளியானது. இதற்கு பல தரப்பினர் ஆதரவு அளித்தாலும், சிலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் வெளியானது.
மாணவர்கள் நீண்ட நேரம் பக்கவாட்டில் பார்வையைச் செலுத்த வேண்டும். மாணவர்களுக்குக் கழுத்து வலி, இடுப்பு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூக வலை தளங்களில் விமர்சனங்கள் வெளியானது. இந்த நிலையில் ‘ப’வடிவ இருக்கை அமைப்பு குறித்து வெளியான உத்தரவை தமிழக அரசு இன்று நிறுத்தி வைத்துள்ளது.
