தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தின் பதினோறு மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(அக்டோபர் 29) அறிவித்துள்ளது.
தமிழ்கத்தில் கோவை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்று(அக்டோபர் 28) 4 செ.மீ முதல் 1 செ.மீ வரை மழை பதிவானது.
மேலும் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“29.10.2024 மற்றும் 30.10.2024: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 31.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
01.11.2024: ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 30.10.2024 அன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தீபாவளி போனஸ் : வலியுறுத்திய எடப்பாடி… நிறைவேற்றிய ஸ்டாலின்
இதற்காகத்தான் மும்பையில் குடியேறினேன் : நடிகர் சூர்யா அளிக்கும் விளக்கம்!