பயிர்க் காப்பீட்டுக்கான கால வரம்பை நீட்டிக்க வேண்டும்: முதல்வருக்குக் கடிதம்!

Published On:

| By christopher

Extension of term limit for crop insurance

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கான கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வேளாண்துறை), கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (வருவாய்), தலைமைச் செயலர் நா.முருகானந்தம், வேளாண்துறை செயலர் அபூர்வா, வேளாண் இயக்குனர் முருகேஷ் உள்ளிட்டோருக்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆர்.அருள்ராஜ் அனுப்பியுள்ள கடிதத்தில், “தற்போது தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில், பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் கீழ் நாளை (நவம்பர்15-ம் தேதி) வரை நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், பல விவசாயிகள் இதுவரை பயிர்க் காப்பீடு செய்ய முடியாத நிலையில் உள்ளனர். தொடர் விடுப்பு, பல மாவட்டங்களில் தொடர் மழை ஆகியவற்றால் காப்பீடு செய்ய முடியவில்லை. எனவே, தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு பரிந்துரைத்து விவசாயிகள் நலனுக்காக பயிர்க் காப்பீட்டுக்கான கால வரையறையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நவம்பர் 15-ம் தேதியை நீட்டிக்கச்செய்ய வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : மருத்துவர்கள் வேலைநிறுத்தம் முதல் கங்குவா ரிலீஸ் வரை!

ஹெல்த் டிப்ஸ்: பழங்கள் மட்டும் சாப்பிட்டால் எடை குறையுமா?

பியூட்டி டிப்ஸ்: மழைக்கேற்ற காலணிகள் எவை?

கிச்சன் கீர்த்தனா : தவா புலாவ்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share