“ரிசல்ட் வந்தாச்சு… அடுத்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் தான்!” டிஆர்பி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… 14 பாடங்களுக்குப் பட்டியல் வெளியீடு!

Published On:

| By Santhosh Raj Saravanan

tn trb pg assistant selection list 2025 released 14 subjects download

“தேர்வு எழுதிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பும் முடிச்சுட்டு, ‘நமக்கு வேலை கிடைக்குமா, கிடைக்காதா?’னு நகம் கடித்துக் கொண்டிருந்த டீச்சர்ஸ்… ரிலாக்ஸ் ஆகிடுங்க.” தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் (PG Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது.

2024-2025ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் (Grade-I) ஆகிய பணியிடங்களுக்கான தற்காலிகத் தேர்வுப் பட்டியல் (Provisional Selection List) தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எந்தெந்த பாடங்களுக்கு? மொத்தம் உள்ள பாடப்பிரிவுகளில், முதற்கட்டமாக 14 பாடங்களுக்கு மட்டும் தேர்வுப் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்கள் இதில் அடக்கம். மீதமுள்ள பாடங்களுக்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செக் செய்வது எப்படி? தேர்வர்கள் உடனடியாக trb.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

ADVERTISEMENT
  • முகப்புப் பக்கத்தில் “Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I – Selection List” என்ற லிங்க் இருக்கும்.
  • அதை கிளிக் செய்தால், பாடவாரியாக (Subject-wise) தனித்தனி பிடிஎஃப் (PDF) பைல்கள் இருக்கும்.
  • உங்கள் பாடத்தைத் தேர்வு செய்து, பட்டியலில் உங்கள் பெயர் மற்றும் ரோல் நம்பர் (Roll Number) உள்ளதா எனச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து என்ன? “லிஸ்ட்ல பேர் வந்தாச்சு… அப்போ வேலை கன்ஃபார்ம் தானே?” என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன தகவல். இது தற்காலிகப் பட்டியல் தான். இதில் இடம்பெற்றுள்ளவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில், விரைவில் பள்ளிக் கல்வித்துறை மூலமாகப் பணி நியமன ஆணைகள் (Appointment Orders) வழங்கப்படும். கவுன்சிலிங் தேதி குறித்த அறிவிப்பு தனியாக வரும்.

ஆசிரியர் வேலைங்கிறது சாதாரண விஷயம் இல்ல… அது ஒரு தவம். அந்தத் தவத்துக்கான பலன் கிடைச்சிருக்கு. லிஸ்ட்ல பேர் வந்தவங்க, உடனே சந்தோஷத்துல அமைதியாகிடாம, உங்க ஒரிஜினல் சான்றிதழ்கள் எல்லாத்தையும் இன்னொரு முறை சரியா இருக்கானு பாத்துக்கோங்க. முக்கியமா, தமிழ் வழிச் சான்றிதழ் (PSTM) வெச்சிருக்கவங்க, அதுல ஏதாவது கரெக்ஷன் இருந்தா இப்பவே சரி பண்ணிடுங்க.

ADVERTISEMENT

கவுன்சிலிங் கூப்பிடும்போது பதறக்கூடாது. லிஸ்ட்ல பேர் வராதவங்க சோர்ந்து போகாதீங்க… அடுத்து டெட் (TET), எஸ்ஜிடி (SGT) தேர்வுகள் வரிசையா வருது… தட்டித் தூக்கலாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share