நஷ்டத்தில் தமிழகப் போக்குவரத்து கழகங்கள்!

Published On:

| By Kavi

பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுத்திய நிலையில் 2022 – 2023ஆம் நிதியாண்டில் ரூ.4,978 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளதாக போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக போக்குவரத்துறையின் கீழ் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 20,127 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இதன்மூலம் தினசரி 1.70 கோடி பேர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1,16,259 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், 2022 – 2023ஆம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.12,007 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

இதில், இயக்க மூலம் ரூ.6,705.69 கோடியும், இயக்கம் அல்லாதவைகள் மூலம் ரூ.5,256.89 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், இந்தக் கால கட்டத்தில் ரூ.16,985 கோடி செலவு ஏற்பட்டுள்ளது.

இதன்படி தற்போது வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,978.38 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு ரூ.452.58 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கொரோனாவுக்கு முந்தைய 2019 – 20ஆம் நிதியாண்டில் ரூ.5230 கோடியும், ஒரு மாதத்துக்கு ரூ.435.88 கோடி இழப்பு ஏற்பட்டது.

கொரோனா காலத்தில் 2020-21ஆம் நிதியாண்டில் ரூ.8,328 கோடியும், ஒரு மாதத்துக்கு ரூ.694.58 கோடியும், 2021 – 22ஆம் நிதியாண்டில் ரூ.6622.21 கோடியும், ஒரு மாதத்துக்கு ரூ.551.85 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்குப் பிறகு இந்த நிதியாண்டில் நஷ்டம் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : பஞ்சாபி எக் மசாலா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share