பெரியார் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!

Published On:

| By christopher

தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுவதையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்களும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

திமுக பவளவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் நேற்று வேலூர் சென்றார்.

இந்த நிலையில் இன்று தந்தை பெரியாரின்‌ 145வது பிறந்தநாளையொட்டி வேலூர்‌ அண்ணா சாலையில்‌ அமைந்துள்ள அவரது திருவுருவச்‌ சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதல்வர்‌ மு.க. ஸ்டாலின்‌ மலர்‌ தூவி மரியாதை செலுத்தினார்‌.

மேலும் பெரியாரின் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய மாவட்ட அலுவலகத்தில்‌ கட்சி நிர்வாகிகளுடன் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செய்தார்.

அதே இடத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பெரியார் சிலைக்கு மரியாதை செய்து, சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

அதே போன்று சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு கீழே இரு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமாரும் தனித்தனியாக மரியாதை செலுத்தினர்.

கிறிஸ்டோபர் ஜெமா

சைமா விருதுடன் விஜய் ரசிகர்களுக்கு லோகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ்!

இந்தியா vs இலங்கை இறுதிப்போட்டி: மழை பெய்தால் என்ன நடக்கும்?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share