10ஆவது முடிச்சா போதும்… அரசு ஆஸ்பத்திரியில் 999 வேலைகள்! தேர்வு கிடையாது… எம்ஆர்பி-யின் அதிரடி அறிவிப்பு!

Published On:

| By Santhosh Raj Saravanan

tn mrb nursing assistant recruitment 2026 999 vacancies apply online

“நர்ஸ் வேலை பார்க்கணும்னு ஆசை… ஆனா பி.எஸ்சி நர்சிங் (B.Sc Nursing) படிக்கலையே!” என்று வருத்தப்படும் இளைஞரா நீங்கள்? கவலையை விடுங்க. பெரிய படிப்பு இல்லாமலேயே, தமிழக அரசு மருத்துவமனைகளில் நிரந்தரப் பணிக்குச் சேரும் வாய்ப்பு உங்கள் வாசலைத் தட்டியிருக்கிறது.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB), ‘செவிலியர் உதவியாளர்’ (Nursing Assistant Grade-II) பணியிடங்களை நிரப்பப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 999 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வேலை தேடுவோரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

படிப்பும், தகுதியும்: இந்த வேலைக்கு விண்ணப்பிக்கப் பெரிய டிகிரிகள் எதுவும் தேவையில்லை.

  • கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
  • கூடுதல் தகுதி: கூடவே, அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் ‘நர்சிங் உதவியாளர் பயிற்சி’ (Nursing Assistant Training Course) முடித்துச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். (குறிப்பு: இந்தப் பயிற்சி ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கால அளவு கொண்டதாக இருக்க வேண்டும்).

செம சான்ஸ்… தேர்வு இல்லை! இதுதான் இந்த அறிவிப்பின் ஹைலைட். இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு (Written Exam) கிடையாது. நேர்காணலும் (Interview) கிடையாது.

ADVERTISEMENT

நீங்கள் 10ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்ணுக்கு 60% வெயிட்டேஜ் மற்றும் நர்சிங் அசிஸ்டெண்ட் பயிற்சியில் எடுத்த மதிப்பெண்ணுக்கு 40% வெயிட்டேஜ் கொடுத்து, மெரிட் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயது வரம்பு:

ADVERTISEMENT
  • பொதுப் பிரிவினருக்கு (OC) 18 முதல் 34 வயது வரை.
  • எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவினருக்கு வயது வரம்பே இல்லை (அதாவது 60 வயது வரை விண்ணப்பிக்கலாம்).

சம்பளம்: அரசு நிரந்தரப் பணி என்பதால், ‘லெவல்-3’ ஊதிய விகிதப்படி ரூ.18,000 முதல் ரூ.58,100 வரை சம்பளம் மற்றும் இதர படிகள் கிடைக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி? விருப்பமுள்ளவர்கள் www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: பிப்ரவரி 8, 2026.

தேர்வு இல்லாமலேயே அரசு வேலை கிடைக்கிறது குதிரைக் கொம்பு. குறிப்பா, பல வருஷமா பிரைவேட் ஆஸ்பத்திரியில குறைஞ்ச சம்பளத்துக்கு வேலை பார்க்குற நர்சிங் அசிஸ்டெண்டுகளுக்கு இது ஒரு ‘லைஃப் டைம் செட்டில்மெண்ட்’. உங்க சான்றிதழ் ஒரிஜினலா, அது கவர்மெண்ட் அங்கீகாரம் பெற்றதான்னு மட்டும் ஒருவாட்டி செக் பண்ணிட்டு, உடனே அப்ளை பண்ணுங்க. சர்வர் பிஸி ஆகுறதுக்கு முன்னாடி முந்துங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share