தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்கும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்காக 72,743 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் நான்கு கட்டங்களாகக் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் இன்று (ஜூலை 17) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
“தமிழகத்தில் இளங்கலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 72 ஆயிரத்து 743 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பங்களில் சான்றிதழ்களை இணைக்க மறந்த மாணவர்களுக்காக இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இந்த நாட்களில் எந்த சான்றிதழ் இணைக்கப்படவில்லையோ அந்த சான்றிதழ்களை இணைத்தால் மீண்டும் அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி பட்டியல் வெளியிடப்படும். TN MBBS BDS Counselling 2025
தரவரிசை பட்டியல் 25ஆம் தேதி வெளியிட்டவுடன் மத்திய அரசின் கால அட்டவணையின் படி ஜூலை 30-ஆம் தேதி காலை 10 மணிக்குக் கலந்தாய்வு தொடங்கும்” என தெரிவித்துள்ளார். TN MBBS BDS Counselling 2025
முன்னதாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் 20 விண்ணப்பதாரர்கள் போலி சான்றிதழ் அளித்தது கண்டறியப்பட்டது. அந்த மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன் மூன்று வருடங்கள் தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
