சுதந்திர தினம் துக்க நாள்: பதிவிட்டவர் கைது!

Published On:

| By Kavi

இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில்…

அரியலூரைச் சேர்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் கோரா என்கிற கோபால் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

நேற்று இரவு அவரது பேஸ்புக் பக்கத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தைப் பற்றி கடுமையாக விமர்சித்து பெரியார் எழுதியவற்றை பகிர்ந்திருந்தார்.

மேலும் கடவுளைப் போன்ற ஒரு மூடநம்பிக்கை தான் சுதந்திர தினம் என்பதும். ஆகஸ்ட் 15 தமிழருக்கு துக்க நாள் என்று பதிவிட்டு இருந்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து இன்று அதிகாலை ஆண்டிமடம் போலீசார் கவரப்பாளையம் பகுதியில் இருந்த கோபால் ராமகிருஷ்ணனின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்துள்ளனர்.

காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட வருவதாக தெரிகிறது. தகவல் அறிந்து தபெதிக நிர்வாகிகள் காவல் நிலைய வாசலில் திரண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த கைது பற்றி போலீஸ் தரப்பில் விசாரித்த போது, “மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவித்து அவரை விசாரிக்க சொல்லி இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது” என்கிறார்கள்.

-வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆளுநரின் தேநீர் விருந்து: பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின்

75,000 புதிய மருத்துவ சீட் : பிரதமர் மோடி அறிவிப்பு!

75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் : புதிய திட்டங்களை அறிவித்த ஸ்டாலின்

மூன்று கான்களையும் இயக்க ஆசை: கங்கனா

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share