ஆன்லைன் மூலம் மின்கட்டணம்: அதிகரிக்க நடவடிக்கை!

Published On:

| By Kavi

சென்னை போன்ற பெருநகரங்களில் மின்கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தமிழகம் முழுக்க அதிகரிக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை நுகர்வோர் முன்பு மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் சென்று கட்டி வந்தனர். பின்னர், வாடிக்கையாளர்களின் வசதிக்காக மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியது. இதன்படி, நுகர்வோர் ஆன்லைன் மூலம் மின் கட்டணத்தை செலுத்தலாம்.

மேலும், கூகுள் பே, யூபிஐ உள்ளிட்ட செயலிகள் மூலம் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்த மின்நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன்படி, கடந்த 2023 ஏப்ரல் மாதம் வரை 57.25 லட்சம் மின்நுகர்வோர் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தைச் செலுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், நடப்பு ஆண்டு 2024 ஏப்ரல் வரை 70.20 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தி உள்ளனர். இதேபோல், கடந்த ஆண்டு மின்கட்டணமாக ரூ.1,550 கோடி வசூல் ஆனது. இது இந்த ஆண்டு ரூ.2,010 கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மின்நுகர்வோர் அதிக அளவில் மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: டிரை ஃப்ரூட்ஸ் கிரிஸ்ப்பி!

தமிழகத்தில் உள்ள 4 கடல்களில் ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி புதிய சாதனை!

50ஆவது படம்… தீவிர புரமோஷன் வேலைகளில் விஜய் சேதுபதி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share