பாலிடெக்னிக் அரியர் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!

Published On:

| By Selvam

பாலிடெக்னிக் கல்லூரி மாணாக்கர்கள் தங்களின் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் பெற மேல்நிலை இரண்டாமாண்டு மாணாக்கர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு நடத்துவது போல் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் கல்லூரி மாணாக்கர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“ஏழை, எளிய மாணாக்கர்கள் கல்வி பயின்று, தகுந்த வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் பல்வேறு நிலையில் தொழிற்சார் பயிற்சியினை வழங்கி வருகிறது.

ஏப்ரல், 2025-இல் நடைபெற்ற பட்டயத் தேர்வுகளில் இறுதி பருவம் அல்லது துணைத் தேர்வினை எழுதிய பாலிடெக்னிக் கல்லூரி மாணாக்கர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் நிலுவை வைத்துள்ளனர்.

அம்மாணாக்கர்கள் அடுத்த நிலையான உயர் கல்வி பயிலவோ அல்லது வேலை வாய்ப்பிற்கோ செல்ல இயலாமல் இருக்கும் சூழ்நிலையினை போக்க முதலமைச்சர் ஸ்டாலின் மேற்படி மாணாக்கர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்க ஏதுவாக ஜூன் மற்றும் ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வின் (Special Supplementary Examination) மூலம் தேர்ச்சி பெறாமல் உள்ள நிலுவைப் பாடங்களை எழுத வாய்ப்பு வழங்கிட அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி இம்மாணாக்கர்களுக்கு தற்பொழுது ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது குறித்த விவரங்கள் அனைத்தும் https://dte.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Special supplementary exam for Diploma Students

இணையதளத்தின் வாயிலாக மாணாக்கர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், ஜூன் மற்றும் ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு கீழ்குறிப்பிட்டுள்ள கால அட்டவணையின்படி விண்ணப்பிக்கலாம். Special supplementary exam for Diploma Students

ஜூன் / ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு(Special Supplementary Exams) விண்ணப்பிப்பதற்கான கால அட்டவணை

சிறப்பு துணைத் தேர்வுகளுக்காக (Special Supplementary : Examination) இணைய வழியில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 18.06.2025

சிறப்பு துணைத் தேர்வுகளுக்காக (Special Supplementary Examination) இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 23.06.2025 இரவு 11.59 வரை

தேர்வு நுழைவுச் சீட்டு (Hal Ticket) பதிவேற்றம் செய்யும் நாள் – 25.06.2025

கருத்தியல் தேர்வுகள் (Theory Examination) நடைபெறும் நாட்கள் : 30.06.2025 முதல் 16.07.2025 வரை Special supplementary exam for Diploma Students

செய்முறைத் தேர்வுகள் (Practical Examination) நாட்கள் : 17.07.2025 முதல் 25.07.2025 வரை

தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் – 30.07.2025

விண்ணப்ப கட்டணம் – ரூ.30

ஒரு பாடத்திற்கான தேர்வு கட்டணம் – ரூ.65

மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share