டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் : எடப்பாடி

Published On:

| By christopher

tn govt should increase post in TNPSC Group 4 : Edappadi palanisamy

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (செப்டம்பர் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வருவதற்காக சொன்னது அத்தனையும் பொய்” என்ற ரீதியில், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்ட திமுக அரசு, அனைத்து தரப்பு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

“தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர்” என்றும் தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசியது.

ஆனால் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தொகுப்பில் 20000 இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் அதில் வெறும் கால் பங்கான 6244 இடங்களை மட்டுமே நிரப்புவதன் மூலம் இத்தேர்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

போட்டித் தேர்வு மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையினைக் கருத்திற்கொண்டு, நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்குமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

’சென்னையில் மழை இருக்கு… ஆனால்’ : தமிழ்நாடு வெதர்மேன் வைத்த ட்விஸ்ட்!

சூட்கேசில் பெண் சடலம்… வீட்டுக்குள் ஹாயாக உறங்கிக் கொண்டிருந்த கொலையாளி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share