தமிழ்நாட்டில் வருவாய்த் துறை அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விதிகளுக்கு உட்பட்டு நிரப்பலாம் என அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது. ஆனாலும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
இதனையடுத்து, காலம் தாழ்த்தாமல் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

