ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள்… மாதம் ரூ.50,000 டூ ரூ.70,000 வரை சம்பளம்!

Published On:

| By Selvam

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்கான தகுதிகள்! TN Govt Free Hotel Management Course for SC ST

12ம் வகுப்பு முடித்தவர்கள் மூன்று வருட முழு நேர படிப்பான, B.Sc Hospitality & Hotel Administration மற்றும் 1.5 வருட முழு நேர படிப்பான Diploma in Food Production வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 1.5 வருட முழு நேர படிப்பான Craftmanship Course in Food Production & Patisserie வழங்கப்படுகிறது.

இதில் படிப்பவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 10 மற்றும் 12ம் வகுப்பில் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.

ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000 to ரூ.35,000 வழங்கப்படும். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை பெறலாம். விருப்பம் உள்ள தகுதியான நபர்கள் என்ற www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம்.

TN Govt Free Hotel Management Course for SC ST

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share