கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கவில்லையா? மீண்டும் ஒரு வாய்ப்பு!

Published On:

| By Kavi

Last Date to join Arts Colleges

அரசு கலை கல்லூரிகளில் சேர விண்ணப்ப பதிவு செய்யாத மாணவர்களுக்கு அரசு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. Last Date to join Arts Colleges

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு 7.05.2025 அன்று தொடங்கியது.

இந்த காலகெடு நேற்றுடன் (27.05.2025) முடிவடைந்தது.

இந்தநிலையில், மாணவர்களின் நலன் கருதி மீண்டும் 30.05.2025 அன்று விண்ணப்ப பதிவு தொடங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “ அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2025-26-கல்வியாண்டிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 07.05.2025 அன்று முதல் 27.05.2025 வரை. www.tngasa.in என்ற இணையதள வாயிலாக பெறப்பட்டது.

இதுவரை 2,25,705 விண்ணப்பங்கள் இணைய தளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,08,619 மாணவிகள், 76,065 மாணவர்கள் மற்றும் 78 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,84,762 மாணாக்கர்கள் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

சிறப்புப் பிரிவு மாணாக்கர்களுக்கான தரவரிசைப் பட்டியல் 29.05.2025 அன்று கல்லூரிகளில் வெளியிடப்படும். பொதுப்பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் 30.05.2025 அன்று கல்லூரிகளில் வெளியிடப்படும்.

கல்லூரித் தகவல் பலகைகளில் தரவரிசைப் பட்டியல்கள் ஒட்டப்பட்டு. கல்லூரி இணைய தளங்களிலும் வெளியிடப்படும். மேலும், 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மற்றும் பொது கலந்தாய்விற்கான தகவல்கள், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மாணாக்கர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலிருந்து தெரிவிக்கப்படும்.

27.05.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் மற்றும் துணைத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் 30.05.2025 அன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். Last Date to join Arts Colleges

Last Date to join Arts Colleges

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 30 முதல் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.

Last Date to join Arts Colleges
Last Date to join Arts Colleges
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share