அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி, தர்ணா என அடுத்த போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர். TN Govt employees plan to hold rally and dharna
அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சங்கம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி வாழ்வூதிய மாநாடு நடத்தினர். இதில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்புக்காலமுறை ஊதியம் போன்ற வாழ்வூதியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
தொடர்ந்து, அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ஏப்ரல் 17ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்த தயாராகி வருகின்றனர்.
வரும் 24ஆம் தேதி நியூ இந்தியா இன்சூரன்ஸ் திட்டத்தை ரத்து செய்து, அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஏப்ரல் 25ஆம் தேதி தலைநகர் சென்னையில் முழுநேர தர்ணா போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை அணி திரட்டி வருவதாக அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி மின்னம்பலத்திடம் கூறினார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அடுத்தடுத்த போராட்டம் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. TN Govt employees plan to hold rally and dharna