தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு வந்து தரக் கூடிய “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” ஆகஸ்ட் 12-ந் தேதி முதல் செயல்பட இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பல்வேறு சேவைகளை மக்கள் வீடுகளுக்கே சென்று வழங்குகிறது. இதன் அடுத்த கட்டம்தான் வீடு தேடி வருகிறது ரேஷன் பொருட்கள்.
வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தின் பெயர் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்”.
இத்திட்டமானது, வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது.
அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை வழங்கப்படும்.
பயனாளிகள்
34.809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81.364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளும் என மொத்தம் 16.73.333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்கள் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடி செல்கின்றன.
மாதந்தோறும் 2-வது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்
மின்னணு எடைத்தராசு e-PoS இயந்திரம் ஆகியவற்றுடன் மூடிய வாகனங்களில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்திட்டத்தால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும். சென்னையில் ஆகஸ்ட் 12-ல் முதல்வர் ஸ்டாலினும், இதர மாவட்டங்களில் அமைச்சர்களும் இத்திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.
