அரசு போக்குவரத்துக்கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை (மார்ச் 21) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. tn govt bus driver conductor jobs
தமிழ்நாட்டில், சென்னை, மதுரை,கும்பகோணம், கோவை, நெல்லை, விழுப்புரம் உள்பட 8 அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளன.
இந்த நிலையில், எட்டு போக்குவரத்து கழகங்களிலும் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் 8 போக்குவரத்து கழகங்களுக்கு உட்பட்ட உட்பட்ட 25 பகுதிகளில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் 756, சேலம் 486, சென்னை 364, நெல்லையில் 362 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.