ஓய்வூதியர் நேர்காணல்: தமிழக அரசு அறிவிப்பு

Published On:

| By Balaji

தமிழக அரசு ஓய்வூதியர்கள் நேர்காணல் தொடர்பாக, தமிழக அரசின் கருவூலக் கணக்குகள் இயக்குநர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும், ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி நேர்காணலைப் பதிவு செய்யவும், நேரில் வர இயலாதவர்கள் வாழ்வுச்சான்று பெற்று கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். ஓய்வூதியப் புத்தகம், வங்கி சேமிப்புக் கணக்கு, ஆதார் அட்டை, வருமான வரிக் கணக்கு எண், குடும்ப அட்டை நகல் போன்ற ஆவணங்களின் நகல்களுடன் வாழ்வுச் சான்றை உரிய படிவத்தில் ஓய்வூதியம் பெறும் கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். வாழ்வுச் சான்று படிவத்தை www.tn.gov.in/karuvoolam/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

ADVERTISEMENT

இந்த நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் ஓய்வூதியர்களுக்கு, ஓய்வூதியம் நிறுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share