உயர்கல்விக்கு வழிகாட்ட புதிய திட்டம் அறிவிப்பு!

Published On:

| By christopher

அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனைகளை வழங்கப் பள்ளிகள் அளவில் உயர்கல்வி வழிகாட்டல் குழுவைப் பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளது.

இதுகுறித்து இன்று (ஏப்ரல் 29) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்படவிருக்கும் பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனைக்குழு வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் செயல்படவுள்ளது.

ADVERTISEMENT

இந்த குழுவில் தலைமை ஆசிரியர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர், மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் இடம்பெறுவர்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டல் குழு உறுப்பினர்களுக்கு மே 5-ம் தேதி வரை பயிற்சி அளிக்கவும் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

கிறிஸ்டோபர் ஜெமா

பிடிஆர் ஆடியோவை விசாரித்தால்… ‘அந்த’ ஆடியோக்களையும் விசாரிக்க வேண்டும்: முரசொலி

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share