ஓர் அரசியல் தலைவராக தமிழ்நாட்டு மக்களால் நன்கு அறியப்பட்டவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன். பல அரசியல் மேடைகளில் தனது கருத்துகளை வெளிப்படையாக பேசிய தோழர் முத்தரசன் தற்போது திரையிலும் தனது கருத்துகளை பேச தயாராகிவிட்டார்.
பல பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கும் “அரிசி” என்ற படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் விவசாயியாக நடிக்கிறார்.

இந்த படத்தில், முத்தரசனின் மனைவி கதாபாத்திரத்தில் நடிகை ரஷ்யா மாயன் நடிக்கிறார். சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ்,வையகன்,அன்பு ராணி, சுபா, பழனி மணிசேகரன், கொண்டைமண்டை ராதாகிருஷ்ணன் மற்றும் பல நடிகர்கள் இந்த படத்தில் தோழர் முத்தரசனுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
அரிசி படம் குறித்து இயக்குனர் விஜயகுமார் பேசியபோது, ”இந்த படம் முழுக்க முழுக்க விவசாய பின்னணியை மையமாக வைத்து உருவாகும் படம். அரிசி என்பது வெறும் உணவு மட்டுமல்ல, மனித வாழ்வியலின் உயிர் நாடி என்பதனை இந்த தலைமுறையினருக்கு எடுத்து சொல்வது தான் இந்த அரிசி படத்தின் நோக்கமும் சிறப்பும்” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அரிசி படம் குறித்து தோழர் முத்தரசன் பேசியப் போது, ”இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வசனங்களும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். கும்பகோணம் பகுதியில் குடவாசல் அருகே உள்ள சிறு கிராமங்களில் 35 நாட்கள் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த பகுதிகளில் வாழும் உண்மையான கிராம விவசாயிகளும் அரிசி படத்தில் நடித்துள்ளார்கள்” என்றார்.
அரிசி படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கார்த்திக் ராஜா
ஓய்வு பெற்ற ஒரே நாளில்…. ஒடிசாவில் அமைச்சர் அந்தஸ்து பெற்ற தமிழக ஐஏஎஸ்!
ஆம்னி பேருந்துகள் இயங்காதா?: அரசு நடவடிக்கை குறித்து அமைச்சர் விளக்கம்!
