10-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு ஸ்டாலின், விஜய் வாழ்த்து!

Published On:

| By christopher

MK Stalin vijay congratulates the students

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (மார்ச் 26) தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் நடப்பு ஆண்டு ப்ளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 தொடங்கி 22-ம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 4-ல் தொடங்கிய ப்ளஸ் 1 பொதுத் தேர்வு நேற்றுடன் (மார்ச் 25) நிறைவடைந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (மார்ச் 26) தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இதையொட்டி, மாநிலம் முழுவதும் 4,107 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள்!

ADVERTISEMENT

இதனிடையே, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்… “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே… All the best!

நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

அதே போன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கருவறை – கர்நாடக இசை – கற்பு

ஹெல்த் டிப்ஸ்: கோடையில் பரவும் சொரியாசிஸ்… தடுப்பது எப்படி?

பியூட்டி டிப்ஸ்: கோடைக்கேற்ற  திறந்தவெளி உடற்பயிற்சிகள் இதோ…

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share