ADVERTISEMENT

ஐ.ஏ.எஸ்‌ அதிகாரிகளுக்கு கூடுதல்‌ பொறுப்பு!

Published On:

| By christopher

இரண்டு ஐ.ஏ.எஸ்‌ அதிகாரிகளுக்கு கூடுதல்‌ பொறுப்பு அளித்து தமிழ்நாடு அரசு இன்று (ஜுன் 30) உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக பொறுப்பில் இருக்கும் இறையன்புவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது.

ADVERTISEMENT

அவரைத் தொடர்ந்து, நகராட்சி துறை கூடுதல் செயலாளராக பொறுப்பில் இருக்கும் சிவதாஸ் மீனா தமிழகத்தின் 49வது புதிய தலைமை செயலாளராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ஐஏஎஸ் அதிகாரிகளின் கூடுதல் பொறுப்பு தொடர்பாக தனது முதல் உத்தரவை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில், பொதுதுறை செயலாளராக உள்ள கே.நந்தகுமார்  ஐஏஎஸ் மனித வள மேம்பாட்டுத் துறை செயலாளராக கூடுதல்‌ பதவி வகிப்பார் என்றும்,

‌அரசு கூட்டுறவு மற்றும்‌ உணவு பாதுகாப்புத்துறை செயலாளராக உள்ள டி. ஜெகநாதன்  ஐஏஎஸ் அண்ணா நிர்வாக பணியாளர்‌ கல்வி இயக்குனராக கூடுதல்‌ பொறுப்பு வழங்கப்படுகிறது என்றும் அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்‌ தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT

கிறிஸ்டோபர் ஜெமா

மாமன்னன் படம் ஜாதி மோதலை ஊக்குவிக்கிறதா?: அமீர் பதிலடி

சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா மீண்டும் நியமனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share