ஹெச்.ராஜா தலைமையில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு!

Published On:

| By christopher

TN BJP Coordination Committee formed under H. Raja

அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில், மூத்த தலைவர் ஹெச். ராஜா தலைமையில் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு இன்று (ஆகஸ்ட் 30) அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் பயில்வதற்காக 3 மாதங்களுக்கு (செப்டம்பர், அக்டோபர், நவம்பர்) லண்டன் சென்றுள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க மூத்த தலைவர் ஹெச். ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு இன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் உறுப்பினர்களாக கட்சியின் மாநில துணை தலைவர்களான சக்கரவர்த்தி, கனக சபாபதி, மாநில பொது செயலாளர்களான முருகானந்தம், ராம ஸ்ரீனிவாசன் மற்றும் மாநில பொருளாளர் சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

இந்த ஒருங்கிணைப்புக் குழு, மாநிலக் குழுவுடன் கலந்துரையாடி, கட்சி நடவடிக்கைகள் குறித்து எந்த முடிவும் எடுக்கும்.

ஒருங்கிணைப்புக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் 1 அல்லது 2 மண்டலங்களின் செயல்பாடுகளைக் கவனிப்பார்கள்.

இது மாநிலத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரால் முடிவு செய்யப்படும்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

குரூப் 1 முறைகேடு வழக்கு : ரத்து செய்ய மறுப்பு!

மதுரையில் தீக்குளித்த திமுக நிர்வாகி மரணம்: அதிர வைக்கும் கடிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share