எந்த துறையில் படித்திருந்தாலும் டிப்ளமோ லேட்ரல் என்ட்ரி சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. join Diploma Lateral Entry
தமிழ்நாட்டில் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் மொத்தமாக 19,000 க்கும் மேற்பட்ட டிப்ளமோ இடங்கள் வழங்கப்படுகின்றன. இந்த கல்லூரிகள் மூன்று ஆண்டு, இரண்டு ஆண்டு (லேட்டரல் என்ட்ரி) மற்றும் பகுதி நேர வடிவங்களில் பல்வேறு பொறியியல் டிப்ளமோ திட்டங்களை வழங்குகின்றன. பல்வேறு தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
இந்தநிலையில் தொழில் நுட்பக் கல்வித் துறை மே 14 தேதியிட்டு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. join Diploma Lateral Entry
அதன்படி, “தொழில் நுட்பக் கல்வி இயக்கக ஆணையரின் அறிவுறுத்தலின்படி, பிளஸ் 2 தேர்வில் வணிகவியல் உள்பட அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் 2025-26-ஆம் கல்வியாண்டில், நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப்படிப்பில் சேர்க்கை செய்து கொள்ள அனைத்து பலவகை தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிளஸ் 2-வில் கணித பாடத்தை பிரதானமாக எடுத்துப் படித்தவர்கள் மட்டுமே டிப்ளமோ சேர முடியும் என்று விதி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.