தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 21 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் உற்சாகமான விழா நடத்தி பொறுப்பேற்றிருக்கிறார்.
செல்வப்பெருந்தகை பதவியேற்பு விழாவில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. அதேநேரம் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் செல்வப்பெருந்தகை வீட்டுக்கே சென்று ரகசியமாக சந்தித்து கட்டித் தழுவி சால்வை அணிவித்து வாழ்த்தியிருக்கிறார்கள்.
தமிழ் மாநில காங்கிரஸை காங்கிரஸ் கட்சியோடு சேர்த்து காங்கிரசை பலப்படுத்துமாறு அப்போது அவர்கள் செல்வப் பெருந்தகையிடம் வேண்டுகோளும் வைத்திருக்கிறார்கள். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இதை முழு மூச்சாக செய்வதாக அவர்களிடம் உறுதியளித்திருக்கிறார் செல்வப்பெருந்தகை.
ஏற்கனவே மாநிலத் தலைவராக அழகிரி இருந்தபோது தமாகாவை காங்கிரசோடு இணையுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் வாசன் அதை நிராகரித்தார்.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு காங்கிரசை பலப்படுத்த பல திட்டங்களை வைத்திருக்கிறார் செல்வப்பெருந்தகை. அதில் ஒன்றாக தமிழ் மாநில காங்கிரசை மீண்டும் காங்கிரஸோடு சேர்க்க செல்வப்பெருந்தகை தீவிரமாக முயற்சி எடுப்பார் என்கிறார்கள் அவரை சந்தித்த தமாகாவினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
தமிழில் வெளியாகும் ‘பிரமயுகம்’ ரிலீஸ் தேதி இதுதான்!
ரூ.700 கோடி கல் குவாரி ஊழல் : அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு!
