“வங்கித்துறையில் பல வருஷமா குப்பை கொட்டியாச்சு… ஆனா சரியான அங்கீகாரம் கிடைக்கலையே!” என்று வருத்தப்படும் வங்கி அதிகாரியா நீங்கள்? உங்கள் அனுபவத்திற்கு ஏற்ற ஒரு கௌரவமான பதவி, தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் (TMB) காத்திருக்கிறது.
நாடு முழுவதும் தனது கிளைகளை விரிவுபடுத்தி வரும் டிஎம்பி வங்கி, தற்போது பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள ‘கிளைத் தலைவர்’ (Branch Head) பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முக்கியமான விஷயம் பாஸ்… இது கல்லூரி முடித்த பிரஷர்களுக்கான (Freshers) வேலை இல்லை. வங்கித்துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கானது.
- தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) முடித்திருக்க வேண்டும்.
- அனுபவம்: பொதுத்துறை வங்கிகள் (PSU) அல்லது தனியார் வங்கிகளில் அதிகாரி நிலையில் (Scale I, II, or III Officer) பணியாற்றிய அனுபவம் கட்டாயம். குறிப்பாக, கிளை மேலாளராகவோ அல்லது அதற்கு இணையான பொறுப்பிலோ குறைந்தது சில ஆண்டுகள் வேலை பார்த்திருக்க வேண்டும். விவசாயத் துறை சார்ந்த கடன் பிரிவில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வங்கி நிர்ணயித்துள்ள வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும். (பொதுவாக அனுபவத்தைப் பொறுத்து வயது வரம்பு மாறுபடும். விரிவான அறிவிப்பில் இதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்).
சம்பளம்: உங்களின் முந்தைய சம்பளம் மற்றும் அனுபவத்தைப் பொறுத்து, டிஎம்பி நிர்வாகம் ஒரு பெரிய தொகையைச் சம்பளமாக நிர்ணயிக்கும். அதுபோக வீட்டு வாடகைப்படி, மருத்துவச் சலுகை என அனைத்தும் உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி? விருப்பமுள்ளவர்கள் www.tmbnet.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘Careers’ பக்கத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் பயோடேட்டா (Resume) மற்றும் அனுபவச் சான்றிதழ்களைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜனவரி 27, 2026.
ஏற்கனவே விஆர்எஸ் (VRS) வாங்கியவர்களோ அல்லது வேறு வங்கியில் பிரமோஷன் கிடைக்காமல் ஒரே இடத்தில் தேங்கி இருப்பவர்களோ, இதை ஒரு ‘கேரியர் ஜம்ப்’ (Career Jump) ஆகப் பயன்படுத்திக்கொள்ளலாம். டிஎம்பி போன்ற பாரம்பரியமான வங்கியில் ‘பிராஞ்ச் ஹெட்’ பதவி என்பது சாதாரண விஷயம் இல்லை. தகுதியுள்ளவங்க உடனே அப்ளை பண்ணுங்க!










