டைட்டானிக், அவதார் பட தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் காலமானார்!

Published On:

| By indhu

டைட்டானிக், அவதார் போன்ற படங்களின் தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் காலமானார்.

ஹாலிவுட் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் ஜான் லாண்டவ் (வயது 63). இவர் உலகளவில் புகழ்பெற்ற திரைப்படங்களான டைட்டானிக், அவதார் மற்றும் அவதார்: தி வே ஆஃப் தி வாட்டர் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

ஜான் லாண்டவ், பாராமவுன்ட் உடன் இணைந்து “கேம்பஸ் மேன்” என்ற படத்தின் மூலம் 1987ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ஆனார்.

இவரது தயாரிப்பில் இதுவரை டைட்டானிக், சோலாரிஸ், அவதார், அலிடா: போர் ஏஞ்சல், அவதார்: த வே ஆஃப் வாட்டர் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன.

ஜான் லாண்டவ் கடந்த 16 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஜான் லாண்டவ் உயிரிழந்துள்ளதாக அவரது மகன் ஜேமி லாண்டவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவதார் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், ஜான் லாண்டவ் இறப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் நண்பரும் தலைவருமான ஜான் லாண்டவ்வின் இழப்பால் நாங்கள் வருந்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.

ஜான் லாண்டவ் ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து தயாரித்த டைட்டானிக், அவதார் மற்றும் அவதார்: தி வே ஆஃப் தி வாட்டர் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் 2 பில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்த படங்கள் ஆகும். ஜான் லாண்டவ் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

போயஸ்கார்டன் வீடு… இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் வாங்கியிருக்க மாட்டேன்: நடிகர் தனுஷ்

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்… தொடரும் வாதம் : வழக்கு மதியம் 2.15-க்கு ஒத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share