திருவண்ணாமலை தீபத்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!

By Minnambalam

|

Published on 14 Nov 2023, 7:36 AM

நவம்பர் 26ஆம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் நிலையில் இன்று (நவம்பர் 14) தீபத் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது.

ADVERTISEMENT

அதைத்தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் ஏழாவது நாளான 23ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும்.

விழாவின் நிறைவாக, 26ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. மேலும், தீபத்திருவிழாவின் தொடக்கமாக தொடர்ந்து மூன்று நாட்கள் காவல் எல்லை தெய்வ வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

ADVERTISEMENT

அதன்படி, இன்று (நவம்பர் 14) துர்கை அம்மன் உற்சவம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, 15ஆம் தேதி பிடாரி அம்மன் உற்சவமும், 16ஆம் தேதி விநாயகர் உற்சவமும் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு தீபத்திருவிழாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. எனவே, முன்கூட்டியே ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், தீபத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகளை சுற்றுலா. பண்பாடு மற்றும் அறநிலையத்துறை செயலாளர் க.மணிவாசன் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது, கோயில் உள் பிராகாரங்கள், வெளிப்பிரகாரங்கள், தேரோடும் மாட வீதி  உள்ளிட்ட பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டார். விழாவுக்கு கூடுதலான பக்தர்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளதால், அதற்கான விரிவான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின் போது பக்தர்களை அனுமதிக்க ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட நடைமுறையை பின்பற்றவும், மூன்றாம் பிரகாரத்தில் உள்ள இட வசதி அடிப்படையில் எண்ணிக்கையை கணக்கிட்டு பக்தர்களை அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: கேஸ்பேச்சோ

கலாபவன் மணி மரணம்: மர்மத்தை உடைத்த அதிகாரி!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel