திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக (Tiruvannamalai Collector) வந்தனா கார்க் இன்று மே 31-ந் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ் இருந்து வந்தார். தற்போதைய அதிகாரிகள் மாற்றத்தில் தர்பகராஜுக்கு பதில் வந்தனா கார்க், திருவண்ணாமலை புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இன்று திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் வந்தனா கார்க் பொறுப்பேற்றுக் கொண்டார். தமது ஆட்சியர் இருக்கையில் அமருவதற்கு முன்னர், அவரை நோக்கி “வெல்கம் மேடம்! வாழ்த்துகள்” என்ற குரல் வந்தது.
குரல் வந்த பக்கம் திரும்பிய வந்தனா கார்க், ”தேங்க்யூ” என சொல்லிவிட்டு, “உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே” என புன்னகதைத்தபடியே இருக்கையில் அமர முயன்றார்.
அப்போது, “நான் தான் கலெக்டர்..” என்ற குரல் வர ஒட்டு மொத்த அரங்கமும் சிரிப்பலையில் மூழ்கியது. புதிய ஆட்சியர் வந்தனா கார்க்கும் சங்கடத்தில் சிரித்தார். அவருக்கு ஆட்சியர் தர்பகராஜ் பொக்கே கொடுத்து வாழ்த்தினார்.









