திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரில் இருந்து சென்னை வழியாக பிகார் மாநிலம் தர்பங்காவிற்கு செல்லும் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (அக்டோபர் 11) இரவு 7.44 மணியளவில் பெரம்பூர் நிலையத்திற்கு வந்தது. அங்கிருந்து புறப்பட்ட ரயில் இரவு 8.27 மணியளவில் கவரப்பேட்டை அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது.
இந்த விபத்தில் ஐந்து பெட்டிகள் தடம்புரண்டது. ரயில் வேகமாக மோதியதால் மூன்று பெட்டிகளில் தீப்பற்றி எரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பயணிகள் 19 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு படையினர், தேசிய மீட்பு படை வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விமானம் தரையிறங்குவதில் சிக்கல்: முழுமையாக விசாரிக்கப்படும் – ஏர் இந்தியா