”விடா முயற்சி, குட் பேட் அக்லி இரண்டுமே நஷ்டம் தான்” : திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி!

Published On:

| By christopher

tiruppur subramaniam on vidamuyarchi good bad ugly

பல ஆண்டுகள் படப்பிடிப்புக்கு பிறகு இந்தாண்டு பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான திரைப்படம் விடாமுயற்சி. tiruppur subramaniam on vidamuyarchi good bad ugly

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார் – த்ரிஷா நடிப்பில் உருவான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் உலகளவில் மொத்தம் ரூ. 138 கோடி வசூலித்ததாக படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் உலகளவில் ரூ. 242 கோடி வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், டூரிங் டாக்கீஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் அஜித்தின் கடைசி இரண்டு படங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில், ”தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய நடிகர்களில் ஒருவர் அரசியலுக்கு போய்விட்டார். இன்னொருவர் ஒன்றரை வருடத்திற்கு ஒரு படம் என இருக்கிறார்.

குட் பேட் அக்லி திரைப்படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என இண்டஸ்ட்ரியில் பேசி கொள்கிறார்கள். ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தயாரிப்பு நிறுவனம் கூறினால் தான் நமக்கு தெரியும். விடாமுயற்சி பொறுத்தவரைக்கும் அது கண்டிப்பாக நஷ்டம் தான்” என திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share