திருப்பதி பக்தர்கள் தரிசனம்: டிக்கெட்டுகள் நாளை வெளியீடு!

Published On:

| By Selvam

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளும்,  வசந்த உற்சவ விழாவுக்கான டிக்கெட்டுகளும் நாளை (மார்ச் 27) காலை வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகள் மாதம்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி ஏப்ரல் மாத ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் நாளை (மார்ச் 27) காலை ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் www. http://tirupathibalaji.ap.gov.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை வசந்த உற்சவ விழா நடைபெற உள்ளது. கோயிலுக்கு மேற்கு பகுதியில் உள்ள வசந்த மண்டபத்தில் தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஏழுமலையான் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்னபன திருமஞ்சனம் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் உள்ள பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் நாளை (மார்ச் 27) காலை 10 மணிக்கு Tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை வெளியிடுகிறது.

வசந்த உற்சவத்தையொட்டி வசந்த மண்டபம் பலவண்ண மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வசந்த உற்சவம் நடைபெறும் மூன்று நாட்களும் அஷ்டதள பாத பத்மாராதனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

டிஜிட்டல் திண்ணை: திமுகதான் வெல்லும்… அமித் ஷாவிடம் அண்ணாமலை கொடுத்த ஃபைல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share