திருப்பதி: தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!

Published On:

| By Kavi

திருப்பதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று (பிப்ரவரி 23) வெளியிடப்பட உள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இணையதளம் வாயிலாக அனைத்து தரிசன டிக்கெட்டுகளையும் வெளியிட்டு வருகிறது.

ADVERTISEMENT

ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெடுகள் தினசரி 20,000 வீதம் ஆன்லைனில் முன்கூட்டியே முந்தைய மாதத்திலேயே வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், 65 வயது நிரம்பிய மூத்த குடிமகன்கள், மாற்றுத்திறனாளிகள், ஐந்து வயதுக்குட்பட்ட கைக்குழந்தை என தினமும் 60,000  பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அவர்களுக்கான டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில் மார்ச் மாதத்துக்கான மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோயால் அவதியுறுபவர்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

ADVERTISEMENT

தேவஸ்தான இணையதளமான tirupatibalaji.ap.gov.in மூலம் டிக்கெட்டுகளை இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ராஜ்

தமிழக மாணவர் மீது ஏபிவிபி தாக்குதல்: மத்திய அமைச்சருக்குக் கனிமொழி கடிதம்!

அதிமுக பழனிசாமிக்கா? பன்னீருக்கா?: நாளை தீர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share