திருப்பதி: முதியவர்கள், குழந்தைகள் வர வேண்டாம்!

Published On:

| By Balaji

திருப்பதியில் மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர் தரிசனங்கள் தொடங்கப்படவில்லை. இதனால் முதியவர்கள், குழந்தைகள் தரிசனத்துக்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் தரிசனங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் கொரோனா விதிமுறைகளின்படி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

ரூ.300 கட்டணத்தில் விரைவு தரிசனம், இலவச தரிசனம், விஐபி பிரேக் உள்ளிட்ட தரிசனங்களில் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த பிரம்மோற்சவ விழாவிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசனம், திருமலையில் வழங்கப்பட்டு வரும் சிறப்பு முதன்மை தரிசனங்களாகக் கருதப்படும் மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோருக்கான தரிசனங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை.

ADVERTISEMENT

ஆனால் சமூக வலைதளங்களில் அவற்றை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது உண்மை இல்லை. எனவே பக்தர்கள் அவற்றை நம்பி திருமலைக்கு வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று 27,482 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 11,565 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். ரூ.3.72 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.

ADVERTISEMENT

**-ராஜ்**

.

.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share