“இனி லட்டு வாங்க நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை” : திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!

Published On:

| By Kavi

திருப்பதி லட்டுக்காக பக்தர்களை நீண்ட நேரம் காக்க வைக்க கூடாது  என்று அதிகாரிகளுக்கு திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. Tirupati Devasthanam takes important steps

திருப்பதி லட்டு பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. ஆனால் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கும், அதன் பிறகு லட்டு வாங்குவதற்கும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. 

திருப்பதியில் வார நாட்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சாமி தரிசனம் செய்கின்றனர். அதுவே வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் . 

நேற்று 66,327 பக்தர்கள்  திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். 26,354 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியிருக்கின்றனர். கோயில் உண்டியலில் ரூ.3.73 கோடி காணிக்கை குவிந்துள்ளது. சுமார் 12 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். 

இந்தநிலையில் பக்தர்களின் வசதியை மேம்படுத்த அன்னமய்யா பவனில் செயல் அலுவலர் ஷியாமளாராவ் நேற்று (ஏப்ரல் 4) அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

பக்தர்களுக்கு வழங்கும் சேவைகள் மற்றும் பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் புகார்கள் அடிப்படையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. 

இதன்முடிவில்,  திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கும் வசதிகள் திருப்திகரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சர்வ தரிசனம் மற்றும் சிறப்பு நுழைவு தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு உணவு பால் மற்றும் குடிநீர் விநியோகம் குறித்த விரிவான பகுப்பாய்வு அறிக்கையை தயாரிக்க வேண்டும்.
லட்டு பிரசாதம் விநியோகிக்கப்படும் கவுண்டர்களில் தாமதம் இன்றி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

எந்த இடத்திலும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடாது. அதற்கேற்ற வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

போக்குவரத்து வசதி தொடர்பாக பக்தர்களிடம் கருத்து பெற்று அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பதியில் இரவு நேரங்களில் பக்தர்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பக்தர்களுக்கு எத்தனை மணிக்கு அறைகள் கொடுக்கப்படுகின்றன, எத்தனை மணி நேரத்தில் அவை காலி செய்யப்படுகின்றன, மற்ற பக்தர்களுக்கு எத்தனை மணி நேரத்தில் மீண்டும் அறை ஒதுக்கப்படுகிறது என்று தகவல்களை பெற்று ஒரு செயலியை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. Tirupati Devasthanam takes important steps

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share