கடந்த நான்கு நாட்களுக்கு பிறகு நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பேருந்து சேவைகள் இன்று (டிசம்பர் 21) மீண்டும் துவங்கியுள்ளது.
கடந்த டிசம்பர் 16,17 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியது. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து சேவைகள் முடங்கியது.
இந்தசூழலில் படிப்படியாக வெள்ளம் வடிந்து வருவதால், நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து சேவைகள் சீரானது. நெல்லை நகரப்பகுதிகளில் இருந்து கிராமப்புறங்களுக்கு பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வடியாத திருப்பெயரை, ஆழ்வார் திருநகரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
அதேபோல தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, மதுரை வழியாக செல்லக்கூடிய பேருந்து சேவையானது மீண்டும் துவங்கியுள்ளது. தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மீண்டும் திறக்கப்படும் சென்னை ஃபோர்டு நிறுவனம்?
உச்சநீதிமன்ற தொடர் விடுமுறை: பொன்முடி மேல்முறையீட்டில் தாமதமா?
மக்களவைக்குள் நுழைந்த இளைஞர்களின் நோக்கம் : திசை மாற்றுகிறதா எதிர்க்கட்சிகள்?
