நெல்லை பேட்டையில் பேருந்து மீது மோதுவது போல் வந்த இருசக்கர வாகனத்தில் இடிக்காமல் இருப்பதற்காக பேருந்தை நிறுத்த முயற்சித்தபோது நிலை தடுமாறி சாலை ஓர பள்ளத்தில் பேருந்து சரிந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலுரை சேர்ந்தவர் கோட்டியப்பன். இவர் நெல்லையில் தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காரையாறுக்கு செல்லும் பேருந்தில் இன்று (ஜூலை 26) காலை வழக்கம் போல் புறப்பட்டார்.
புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு நெல்லை பேட்டை ஐ.டி.ஐ அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பேருந்தில் மோதுவதை போல் வரவே அதன் மீது இடிக்காமல் இருப்பதற்காக டிரைவர் கோட்டியப்பன் பேருந்தை திருப்பியுள்ளார்.
அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மற்றொரு பகுதிக்கு சென்று அங்கிருந்த சாலையோர பள்ளத்தில் சரிந்து நின்றது.
இந்த விபத்தில் டிரைவர் கோட்டியப்பன் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் சிலரும் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலசார் படுகாயம் அடைந்த கோட்டியப்பன் மற்றும் பயணிகளை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டபோது எந்த வாகனமும் வராததால் அனைவரும் உயிர் தப்பினர்.
நெல்லை சரவணன்
ஆமாம்… நாங்கள் வாரிசுகள் தான்… நீங்கள் கோட்சேவின் வாரிசுகளா? : ஸ்டாலின் காட்டம்!
டிஜிட்டல் திண்ணை: கை கழுவும் ஸ்டாலின்…சிறையில் செந்தில்பாலாஜி மௌன விரதம்!
