சிவகங்கை: சிதம்பரத்தை சீண்டிய திருநாவுக்கரசர்

Published On:

| By Aara

திருச்சி காங்கிரஸ் எம்பி ஆக இருந்த திருநாவுக்கரசருக்கு மீண்டும் இந்த முறை திருச்சி தொகுதி வழங்கப்படவில்லை. திருச்சி தொகுதியை காங்கிரசிடமிருந்து பெற்று மதிமுகவின் துரை வைகோவுக்கு கொடுத்து விட்டது திமுக தலைமை.

இதனால் இப்போது தனக்கு வேறு தொகுதி ஒதுக்கியாக வேண்டும் என்று டெல்லியில் முயற்சி செய்து கொண்டிருந்தார் திருநாவுக்கரசர். காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தேனி இருந்தால் அங்கே செல்லலாம் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால் தேனியும் திமுகவுக்கு சென்று விட்டதால் இப்போது சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு சில முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள ஆலங்குடி, திருமயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் தனது புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் வருவதாகவும், எனவே தனக்கு சிவகங்கை தொகுதி தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார் திருநாவுக்கரசர்.

ஆனால் தற்போதைய சிவகங்கை சிட்டிங் எம் பி ஆன கார்த்திக் சிதம்பரம் மீண்டும் அங்கே போட்டியிடுவதில் தீவிரமாக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் ப. சிதம்பரம் தனது மகனுக்கு சீட்டு வாங்கித் தருவதிலும் உறுதியாக இருக்கிறார். எனவே சிவகங்கை சிதம்பரம் கார்த்தி சிதம்பரத்துக்கு தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

வேந்தன்

திருவள்ளூர்: ஜெயக்குமாரா? சசிகாந்த் செந்திலா?

“அதிமுகவை பலவீனமாக எடைபோட வேண்டாம்” : எடப்பாடி பழனிச்சாமி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share