திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜூன் மாதத்தில் ரூ.81 லட்சத்து 85 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
அறுபடை வீடுகளில் உள்ள முருகன் கோவிலில் கடலுக்கு அருகில் உள்ள ஒரே தலம் திருச்செந்தூர் முருகன் கோவில் என்பதால் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் மாதம்தோறும் இரண்டு முறை உண்டியல் காணிக்கை எண்ணப்படும். அந்தவகையில் ஜூன் மாதத்திற்கான 2-ஆவது உண்டியல் எண்ணும் பணி கோவில் வசந்த மண்டபத்தில் அறங்காவலர் குழு தலைவர் ரா. அருள்முருகன் இணை ஆணையர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.

கோவில் நிரந்தர உண்டியல்கள், மேலக்கோபுர திருப்பணி உண்டியல், கோசாலை பராமரிப்பு உண்டியல், யானை பராமரிப்பு உண்டியல், திருச்செந்தூர் முருகன் உப கோவில்களான சிவன் கோவில் உண்டியல்,வெயிலுகந்தம்மன் கோவில் உண்டியல்கள் எண்ணப்பட்டது.
இதில் ஒரு கோடியே 81 லட்சத்து 85 ரூபாய் பணம் காணிக்கையாகவும், ஒன்றரை கிலோ தங்கம், 32 கிலோ வெள்ளி, 523 வெளிநாட்டு பணம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
செல்வம்