வெண்பருச்செதில் நோய், செதில் உதிர் நோய் என்றெல்லாம் அழைக்கப்படும் சரும நோய்களில் ஒன்றான சொரியாசிஸ் என்றும் அழைக்கப்படும் காளாஞ்சகப் படை கோடையில் பெரும் பிரச்சினையைத் தரும்.
ஆண்களைவிட, பெண்கள் இந்தப் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 5-25 வயதினர் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும், எல்லா வயதினருக்கும் கோடைக்காலத்தில் இந்த நோயால் பாதிக்கப்படலாம்.
வெட்பாலை (Wrightia tinctoria) இந்த நோய்க்கான சிறப்பு மூலிகை என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். இதை நாமே வீட்டில் எளிதாகத் தயாரிக்கலாம். வெட்பாலை இலைகளைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, வாயகன்ற பாத்திரத்தில் இட்டு, அதில் இலைகள் மூழ்கும் அளவுக்குத் தேங்காய் எண்ணெயை விட்டு, வெயிலில் 3 அல்லது 4 நாள்கள் வைத்து எடுக்கவும். பின் இலைகளைப் பிழிந்து, எண்ணெயைச் சேகரித்துக் கொள்ளவும். தைலம், அழுத்தமாகவும், கருநீலச் செந்நிறமாகவும் இறங்கும். இத்தைலத்தை 5-10 மில்லி 2 வேளை பாலுடன் அருந்தலாம். வெளிப்பிரயோகமாகவும் தடவலாம்.
தோலில் காணப்படும் படைகளை இள வெந்நீரில் நன்றாக நனையச் செய்து, மென்மையாகத் தேய்த்து செதில்களை அகற்றித் துவட்டி உலர்த்திய பிறகே புற மருந்துகளை உபயோகிக்க வேண்டும்.
வெளிப்பிரயோகத் தைலங்களைத் தடவியபின், 1-2 மணி நேரம் ஊறிய பின்னரே கழுவுதல் வேண்டும்.
பச்சைப் பயறு மாவு கொண்டு கழுவுதல் நல்லது.
மது, மாமிசம் குறிப்பாக கோழிக்கறி, வெப்பத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் நீக்கப்படல் வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் சீப்பு (Comb), துண்டு (Towel) போன்ற பொருள்களை மற்றவர்கள் பயன்படுத்துதல் கூடாது.
மன அழுத்தம் குறைய யோகாசனப் பயிற்சிகள் செய்தல் அவசியம்.
காலை வெயில் உடலில் படுவது மிகவும் நல்லது.
நல்ல தூக்கம் மிகவும் அவசியம் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: மேத்தி ரைஸ்
பஞ்சாப் ஜெர்ஸி போட்டுக்கொண்டு ‘பெங்களூருக்காக’ விளையாடிய… பட்டைய ‘கெளப்பும்’ மீம்ஸ்கள்!
RCB vs PBKS: ‘தூதுவன் வந்தான்’ வென்றது பெங்களூரு… கோலி கொண்டாடிய ரசிகர்கள்!