ஹெல்த் டிப்ஸ்: அலுவலகத்தில் ஆரோக்கியமாக வலம்வர!

Published On:

| By Selvam

கம்ப்யூட்டருக்கும் நம்முடைய கண்களுக்குமான இடைவெளி, கோணம் என அனைத்தும் சரியாக உள்ளதா, நாற்காலி கீழ் முதுகைத் தாங்கும் வகையில் உள்ளதா என்பன போன்றவற்றை கவனிக்க வேண்டும். Tips to Improve Your Health at Work

நீண்ட நேரம் உட்கார்ந்திருக்காமல், அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும். நடப்பதற்காக ரிமைண்டர் செட் செய்து கொள்ளலாம். காபி, டீ சாப்பிட என நடப்பதற்கு ஏதாவது ஒரு காரணத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

அதிக அளவில் காபி, டீ அருந்துவதும் தவறு. இரு வேளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். சரியான நேரத்துக்கு மதிய உணவை உட்கொள்ள வேண்டும். வேலை செய்யும் இடத்திலேயே அமர்ந்து மதிய உணவை உண்ணக் கூடாது.

மேஜை மீது தண்ணீர் பாட்டிலை வைத்து, அவ்வப்போது நீர் அருந்த வேண்டும். பிளாஸ்டிக் தவிர்த்து, உலோகத்தால் ஆன பாட்டிலைப் பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

வடை, சமோசா போன்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்த்து, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை என ஆரோக்கியமானவற்றை எடுத்துக்கொண்டால் அலுவலகத்திலும் ஆரோக்கியமாக வலம் வரலாம் என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share