முத்துப் போன்ற பற்கள்… முகத்தை அழகாக்கும். ‘பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்களும் நம்மை எட்டிப்பார்க்கும். பற்கள்தான் ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன என்கிறது மருத்துவ உலகம். அப்படிப்பட்ட பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதோ உங்களுக்கான டிப்ஸ்…
செய்யக்கூடியவை…
சாப்பிட்டதும், ஒரு மணி நேரம் கழித்து, அவசியம் பல் துலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்
தூங்கச் செல்வதற்கு முன்பு பல் துலக்க வேண்டும்
புகைத்தல், மது அருந்துதல் கைவிடுங்கள்.
போதுமான அளவுக்கு தண்ணீர் அருந்துங்கள்.
உணவு சாப்பிடும் நேரத்தில் மட்டும் இனிப்பு சாப்பிடுங்கள்.
ஜூஸ் செய்து குடிப்பதற்குப் பதிலாக பழங்களைக் கடித்து சாப்பிடுங்கள்.
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பால் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
குளிர்பானம் குடிப்பதைத் தவிருங்கள். இல்லையெனில், ஸ்ட்ரா பயன்படுத்துங்கள்.
குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தியுங்கள்.
செய்யக் கூடாதவை…
‘நறநற’வெனப் பல்லைக் கடிக்காதீர்கள்
நகத்தைக் கடிக்கக்கூடாது. அதன் மூலம் கிருமிகள் வாய்க்கு சென்று வியாதிகளைப் பரப்பிவிடும்.
பல்லை அழுத்தித் தேய்க்காதீர்கள்.
பாட்டில் மூடி போன்ற கடினமான பொருட்களை பல்லால் கடித்துத் திறக்க முயற்சி செய்யாதீர்கள். பற்களுக்கு சேதம் ஏற்படுத்துவதுடன், உதடுகளிலும் கீறல் அல்லது காயம் ஏற்படலாம்.
மேற்சொன்ன ஆலோசனைகளைப் பின்பற்றினால், ஆரோக்கியமான புன்னகை உங்கள் வசம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பேக்கடு பாஸ்தா
அச்சத்தில் ஜே.எம்.எம் தலைவர்கள்: ஜார்க்கண்டில் நடக்கும் ஜனநாயக படுகொலை!