பியூட்டி டிப்ஸ்: கோடைக்கேற்ற ஆடை… உங்கள் சாய்ஸ் இதுவாக இருக்கட்டும்!

Published On:

| By Minnambalam Desk

“கோடைக்காலத்தில் வெயில் கடுமையை விரட்ட ஆடைகளுக்கான பங்கு அவசியம். பொதுவாக அடர்நிறங்கள் சூரிய வெளிச்சத்தை ஈர்த்து, உடலின் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடியவை என்பதால் கோடை நேரத்தில் அடர்நிற ஆடைகளைத் தவிர்க்கவும்.

பேஸ்டல், நியான் போன்ற கூல் நிறங்களில் ஆடைகளைத் தேர்வு செய்யலாம். மிக்ஸ் மேட்ச் செய்யும்போது, அடர் நிறம் மற்றும் வெளிர் நிற காம்போவில் ஆடைகளை மேட்ச் செய்கிறீர்கள் என்றால் டாப் வெளிர் நிறத்தில் இருக்கட்டும்.

ஸ்டோன் மற்றும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளைத் தேர்வு செய்யும் போது சருமத்தை உறுத்தும். மேலும், ஆடையின் எடையும் அதிகமாக இருக்கும். எனவே, இத்தகைய ஆடைகளைக் கோடைக்காலத்தில் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.

செல்ஃப் டிசைன்கள் கொண்ட இக்கட், போஹோ டாட், (Boho dot) செக்டு பேட்டர்ன் மெட்டீரியல்களைத் தேர்வு செய்யலாம். ஃப்ளோரல் டிசைன் மெட்டீரியல்கள் கூடுதல் அழகு தரும். Tips for Choose Summer Cloths 2025

டெனிம் மெட்டீரியல் கனமாக இருப்பதுடன் வியர்வையை உறிஞ்சாது என்பதால் அதைத் தவிர்த்து காட்டன், லினன் மற்றும் லைட் வெயிட் மெட்டீரியல்கள் சிறந்த சாய்ஸ்.

விசேஷங்களுக்குச் செல்லும்போது காட்டன் ஆடைகள் சிறப்பாக இருக்காது என்று நினைக்க வேண்டாம். ஆடையின் மீது ஒரு சில்க் ஓவர் லே அணிவது, சில்க் டாப்புக்கு ஃப்ரீ பிட் பேன்ட்களைத் தேர்வு செய்வது என வித்தியாசம் காட்டுங்கள்.

சம்மரில் ஸ்லீவ் இல்லாத ஆடைகளைத் தேர்வு செய்யலாம். சருமம் கருமையாகி விடுமே என பயப்படுபவர்கள் சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம். ஸ்கர்ட், பலாசோ, ஃப்ரீ ஃபிட்டிங் பேன்ட் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம். சல்வார்தான் என்னுடைய சாய்ஸ் என்பவர்கள் லெகின்ஸ், ஜெகின்ஸ் அணிவதைத் தவிர்த்து காற்றோட்டமான ஆடைகளைத் தேர்வு செய்யுங்கள்.

புடவை விரும்பிகள் ரஃபில் பிளவுஸ், பெல் ஸ்லீவ் பிளவுஸ் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம். கூடுமானவரை பேடடு பிராக்களைத் தவிர்ப்பது நல்லது” என்கிறார்கள் காஸ்டியூம் டிசைனர்ஸ். Tips for Choose Summer Cloths 2025

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share