Tillu Square: ஓடிடி ரிலீஸ் எப்போது?

Published On:

| By Manjula

சித்து ஜொன்னலகட்டா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் கடந்த மார்ச் 29-ம் தேதி வெளியான திரைப்படம் தில்லு ஸ்கொயர்.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சுன் போர் சினிமாஸ் இணைந்து தயாரித்திருந்த இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ADVERTISEMENT

மாலிக் ராம் இயக்கத்தில் வெளியான தில்லு ஸ்கொயர் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை, ரூபாய் 125 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 26-ம் தேதி நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தில்லு ஸ்கொயர் வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என மொத்தம் 5 மொழிகளில் தில்லு ஸ்கொயர் ரிலீஸ் ஆகிறது.

ADVERTISEMENT

ரொமான்ஸ், காமெடி என ரசிகர்களைக் கவரும் அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இருந்தன. என்றாலும் சித்து-அனுபமா இடையிலான முத்தக்காட்சி படம் வெளியான போது, மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது ஓடிடி தளத்தில் படம் வெளியாவதால் மீண்டும் இந்த காட்சியானது, ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அலசி ஆராயப்படலாம்

சித்து நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான டிஜே தில்லு படத்தின் 2-வது பாகம் தான், இந்த தில்லு ஸ்கொயர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சீண்டிய ராகுல் காந்தி… பினராயி விஜயன் பதிலடி : இந்தியா கூட்டணியில் சலசலப்பு!

அயோத்தி நடிகைக்கு அடுத்தடுத்து ‘குவியும்’ வாய்ப்புகள்..!

ஒருவழியாக ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ OTT ரிலீஸ் தேதி வெளியானது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share