டிக்டாக்: முன்மாதிரி கல்யாணம்!

Published On:

| By Balaji

இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் பெருமளவு அதிகரித்துள்ளது. மார்ச் 31 வரை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி இருந்தாலும், மறுபுறம் அந்த விடுமுறையைக் கொண்டாட முடியாத மனநிலையும் ஏற்பட்டிருக்கிறது.

வருமுன் காப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருவதன் கூடவே, வந்தபின் பரவாமல் இருப்பதற்கும் மும்முரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டுக்கு பெருமளவு பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும், நமது அண்டை மாநிலமான கேரளா இந்த கொடிய வைரஸால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 நோய்த் தாக்குதலில் இருந்து மக்களை மீட்டெடுக்க அம்மாநில அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

ADVERTISEMENT

மக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளில் பொதுமக்களும் கைகோர்த்துள்ளனர். சமூக வலைதளங்களிலும், ‘பிரேக் த செயின்’ என்னும் ஹேஷ்டேக் பிரபலமாகியுள்ளது. ‘பிரேக் த செயின்’ என்பதன் மூலம் கொரோனா சங்கிலியை உடைக்க அனைவரும் கை தொடாமல் கை கோர்த்துள்ளனர்.

@arunkanjikuzhy2

ഇവിടെ ഇങ്ങനെ ആണ്♥️നമ്മൾ മാതൃകയാണ് ♥️ ആശംസ ഏകാം ഇവർക്ക് ????????????????ഫോട്ടോ നന്നാകേണ്ട???? കൊറോണ വരരുത് ##coronavirus ##rejithserarmy ##covid19

♬ original sound – Arun Kanjikuzhy

ADVERTISEMENT

அதன் படி கேரளாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மணமகன், மணமகள் உட்பட அனைவரும் மாஸ்க் அணிந்து பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.

மூன்று லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்த இந்த வீடியோவிற்கு அறுபதாயிரத்துக்கும் அதிகமான லைக்குகளும் கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

**-டிக் டாக் யூஸர்**,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share