நெடுங்காலமாக பழக்கத்தில் இருந்து வரும் பழமொழிகள் சில தவறான எண்ணத்தில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் உண்மையாகவே நல்ல எண்ணத்தில், சிறப்பான பொருளையும் குறிக்கோளையும் கொண்டுள்ள அத்தகைய பழமொழிகளின் உண்மை அர்த்தம் நம்மை வியப்படைய செய்யும்படியாக உள்ளது.
அவ்வாறு தவறாக புரிந்துகொள்ளப்பட்ட பழமொழி ஒன்றுக்கு சிறந்த விளக்கம் அளித்துள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த டிக் டாக் பயனாளி ஒருவர். **‘அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி’** என்ற பழமொழி பெரும் தவறான அர்த்தத்தில் தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றும் கிராமப்புறங்களில் பலரும் பயன்படுத்தி வரும் இந்த பழமொழி கூறும் உண்மைப் பொருளை தன் வீடியோ மூலம் அவர் உணர்த்தியுள்ளார்.
அதாவது, அனைவருமே கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்து வந்த பண்டைய காலங்களில் அண்ணன், தம்பிகள் என்று சகோதரர்களே ஐந்து, ஆறு பேர் ஒரே வீட்டில் இருப்பார்கள். இதில் முதலாவதாக திருமணமாகி வரும் மூத்தஅண்ணனின் மனைவி குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார். அவ்வாறு அவர் செய்யும் போது அவருக்கு நேரம் பற்றாக்குறையாகவே இருக்கும். இதனால் அவர் தன் கணவனுடன் செலவிடும் நேரம் குறைந்துவிடும்.
@apimannanm
ஆனால் அனைத்து ஆண்களுக்கும் திருமணம் ஆகி கடைசியாக திருமணம் செய்துகொள்ளும் தம்பியின் மனைவிக்கு வேலைப் பளு மிகுந்த அளவு குறைந்து விடும். இதனால் அவர் தன் கணவனிடம் அதிக நேரம் செலவிட வாய்ப்பிருக்கிறது. எனவேதான் அத்தகைய கூட்டுக் குடும்பங்களை கருத்தில் கொண்டு ‘அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி’ என்னும் பழ மொழியை உருவாக்கியுள்ளனர்.
இத்தகைய விளக்கத்தைக் கூறிய அவரது வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.
**-டிக் டாக் யூஸர்**
�,”