வீட்ட��லேயே வாழ்த்து மடல் செய்யலாம்!

By Balaji

|

Published on 30 May 2020, 12:00 AM

கொரோனா அச்சம் காரணமான ஊரடங்கால் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் நாம் தவித்து வருகிறோம்.

எதிர்பாராமல் கிடைத்த இந்த ஓய்வு நேரத்தை எவ்வாறு பயனுள்ள வகையில் செலவிடலாம் என்று பலரும் யோசித்து வருகின்றனர். அந்த வகையில் புதிதாக சமையல் கற்பது, கைவினைப் பொருட்கள் செய்ய கற்றுக்கொள்வது, ஓவியம் வரைவது என்று தங்கள் நேரத்தை பலரும் செலவிட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

தாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களைப் பிறருக்கும் தெரிவிக்க வேண்டும் என்னும் நல்லெண்ணத்தில் அது தொடர்பாக வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் சிலர் பதிவேற்றி வருகின்றனர். அவ்வாறு ஏராளமான வீடியோக்கள் டிக் டாக் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அந்த வகையில் எளிமையாக வாழ்த்து மடல் செய்வது குறித்த வீடியோ டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. லாக்டவுன் காரணமாக தங்கள் பிறந்த நாள் விழாக்களை கொண்டாட இயலாமல் கவலையில் இருப்பவர்களை உற்சாகமூட்டும் விதமாக வீட்டிலேயே பிறந்தநாள் வாழ்த்து மடல் செய்யலாம்.

@jeet_boruah20

cute birthday card##diy ##helo ##heloapp ##helomela ##helostar ##foryou ##fyp ##edutok ##jeetsfam

♬ original sound – fiza manchanda????

ADVERTISEMENT

சாதாரண ஒரு வெள்ளைத் தாளை எடுத்து அதனை இரண்டாக மடித்துக் கொள்ள வேண்டும். அதன் ஒரு புறத்தில் விரும்பும் வடிவத்தில் வெட்டி எடுத்து சிவப்பு நிறத்திலான தாளை அடிப் பகுதியில் ஒட்டி வைக்க வேண்டும். இலை வடிவத்தில் சிறு சிறு துண்டுகளை வெட்டி எடுத்து வெள்ளை நிறத்தில் இருக்கும் பகுதியில் சிவப்பு நிற இலைகளையும், சிவப்பு நிறத்தில் இருக்கும் பகுதியில் வெள்ளை நிறத்தில் வெட்டி எடுத்த இலைகளையும் வரிசைப்படுத்தி ஒட்ட வேண்டும்.

இதய வடிவில் தாளை வெட்டி எடுத்து வாழ்த்து மடலில் ஒட்டி விரும்பும் விதத்தில் அதை மேலும் அழகு படுத்தலாம். அவரவர் கற்பனைக்கு ஏற்ற வகையில் வாழ்த்து மடலின் உட்புறத்தையும் அலங்கரிக்கலாம்.

இவ்வாறு எளிதாக கிடைக்கும் பொருட்களை கொண்டு அழகான வாழ்த்து மடல் செய்து பிறந்தநாள் கொண்டாடும் நமக்கு நெருக்கமானவர்களை மகிழ்ச்சிப் படுத்தலாம்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel