`டிக் டாக்: மயிலுடன் விளையாடும் பூனை!

Published On:

| By Balaji

நாம் காண நினைக்கின்ற, நம் கற்பனைக்கு எட்டாத பல விஷயங்களையும் கூட டிக் டாக் வீடியோக்கள் வழியாக நம்மால் பார்க்க முடிகிறது.

அந்த வகையில் தோகை விரித்து ஆடும் அழகு மயிலும், அதனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பூனையும் இருக்கும் வீடியோ டிக்டாக்கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு மிருகக்காட்சி சாலையிலோ அல்லது ஏதேனும் ஒரு பகுதியிலோ ஒரு ஆண் மயிலைக் கண்டால், இப்போதே மழை வந்து இந்த மயில் தோகை விரித்து ஆடாதா?” என்னும் ஆசை சிறு குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை பலருக்கும் இருக்கும்.

அவ்வாறு நிறங்களும், அழகும் நிறைந்து நிற்கும் மயிலும், அது விரித்தாடும் தோகையும், ஒருவித மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் நம் மனதிற்கு அளிப்பதாக இருக்கும்.

அவ்வாறு அரிதாகக் காணக் கிடைக்கும் அந்த காட்சியை டிக் டாக்கில் ஒருவர் வீடியோ எடுத்து பதிவேற்றியு���்ளார். இதிலும் அதிக சுவாரசியம் என்னவென்றால் தோகை விரித்து ஆடும் அந்த மயிலின் அருகே அவர் வீட்டில் வளர்க்கும் பூனைக்குட்டி சென்று விளையாடப் பார்க்கிறது.

@aryaarun1992

പൂച്ച ഇപ്പം പടമായേനെ ????????????(my home)

♬ original sound – Mahesh_Attingal

மயிலின் தோகையைத் தொட்டும், அதன் அருகில் சென்று கொண்டே இருந்தும் பூனை விளையாடுகிறது. ஆனால் மயிலோ பூனையிடம் இருந்து சற்று விலகி நடக்கும் விதத்தில், ஓரமாக சென்று விடுகிறது.

காணக் கிடைக்காத இந்த கண்கவர் காட்சி டிக் டாக்கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மூன்று லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களையும் 45 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளையும் இந்த வீடியோ பெற்றிருக்கிறது.

**-டிக் டாக் யூஸர்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share